Wednesday, 21 May 2014

ஆரஞ்ச் பழங்களின் மூலம் அழகு டிப்ஸ் - உங்களுக்காக...!



கண்களைச் சுண்டி இழுக்கும் வசிகரமான ஆரஞ்சு பழம், நம் தேகத்துக்கும் வசிகரத்தை அள்ளித் தரக்கூடியது. அவற்றில் சில.....

1. கண்கள் "ப்ளிச்" ஆக சில குறிப்புகள் இதோ.....

ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள்.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் "ப்ளிச்" ஆகிவிடும்.
தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

2. ஜொலி ஜொலிக்க...

தலையின் வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கிறது ஆரஞ்சு தோல் சிகிச்சை.

உலர்ந்த ஆரஞ்சு தோல், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா - இவை ஒவ்வொன்றும் 100 கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளியுங்கள்.

இப்படி செய்துவந்தால் முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். இதையே உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கும் வாசனை பவுடராகவும் பயன்படுத்தலாம்.

3. வடுக்கள் நீங்க...

முகத்தில் பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மாறாத தழும்பாக இருந்து வாட்டுகிறதா? ஆரஞ்சு விழுது இருக்க கவலையேன்?

ஆரஞ்சு தோல் அரைத்த விழுது கால் டீஸ்பூன், கசகசா விழுது - 1 டீஸ்பூன்,சந்தனப் பவுடர் - 2 சிட்டிகை... இவற்றை கெட்டியான விழுதாக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்கப் போகும்போது, பருக்கள் வந்த இடத்தில் மூடுவது போல் பூசுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.

இந்த சிகிச்சையால் வடு மறைவதுடன், பருக்களும் இனி உங்கள் முகத்தை எட்டியே பார்க்காது.

4. கருமையை விரட்டியடிக்க....

சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும் அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்...

1 வேப்பங்கொழுந்துடன், ஆரஞ்சு தோல் விழுது - கால் டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் கால் டீஸ்பூன் கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து இருக்கிறதோ, அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

வாரம் இருமுறை செய்யுங்கள் கருமை ஓடிவிடும்.

5. ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை...

தலை எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால், அது குப்பைக் கூடையாகி அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பை அடியோடு அகற்றுகிறது. ஆரஞ்சு மசாஜ் சிகிச்சை.

உலர்ந்த ஆரஞ்சு தோல் - 100 கிராம், வெந்தயம் - 100 கிராம், பிஞ்சு கடுக்காய் - 10 கிராம், வால் மிளகு - 10 கிராம், பச்சை பயறு - கால் கிலோ... எல்லாவற்றையும் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இதை வாரம் இரு முறை தலையில் நன்றாகத் தேய்த்துக் குளியுங்கள்.

அரிப்பு போவதுடன் சுத்தமும், வாசனையுமாகக் கூந்தல் பளபளக்கும்.

6. ஆரஞ்சு ஃப்ருட் பேக்...

வெளி தூசுகளால் முகம் சிலருக்கு களையிழந்து காணப்படும். அவர்களின் முகத்தில் ஒளியேற்ற இதோ ஆரஞ்சு ஃப்ருட் பேக்.

ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் ஒரே அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு 5 நிமிடம் கழித்து கழுவுங்கள் வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர பேஷியல் செய்தது போல் முகம்பிரகாசமாக ஜொலிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம்.
Read more ...

ஆன்லைன் கிரேடிட் கார்டு கொள்ளையில் இருந்து தப்புவது எப்படி..!



இண்டர்நெட்டில் அதிகரித்து வரும் கிரெடிட் கார்டு மோசடிகளால், நிதித்துறை பல்வேறு வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. இன்றைய நாட்களில், சில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் இணைய வழி மோசடி நடக்காமலிருக்கும் என உறுதிமொழியையும் மற்றும் அதிகபட்ச பாதுகாப்பு அம்சங்களையும் தங்களுடைய அட்டைகளுக்கு கொடுத்து வருகின்றன.

என்னதான் அவர்கள் உறுதி கூறினாலும் இது போன்ற திருட்டுகள் இன்னும் குறைந்தபாடு இல்லைய, தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே நமது பணத்தை நாம் தான் பத்திரமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அதனால் பாதுகாப்பு அம்சங்களை சரி வர பயன்படுத்தி கிரெடிட் கார்டு மோசடிகளிலிருந்து தப்பித்துக் கொள்வது நல்லது. இது பற்றி மேலும் அறிய பின்வரும் 8 டிப்ஸ்களை படியுங்கள்.

வருமுன் காப்பதே நல்லது' என்பது இந்த பிரச்சனைக்கு பொருத்தமான பழமொழியாகும். இணைய வழி வைரஸ்களில் இருந்து உங்களுடைய கம்ப்யூட்டரை பாதுகாக்க நினைத்தால், ஆன்ட்டி-வைரஸ் மென்பொருளை நிறுவுவது நல்லது.

விண்டோஸ் மெயில் மற்றும் அவுட்லுக் போன்ற வெப் பிரௌஸர்கள் மற்றும் ஈமெயில் முகவர்கள் ஆகியவற்றை அப்டேட் ஆக வைத்திருப்பது அவசியமாகும். பிஷ்ஷிங் (Phishing) மற்றும் மால்வேர் (Malware) போன்றவற்றில் இருந்து உங்களுடைய கணிணியை பாதுகாக்கக் கூடிய முழுமையான ஆன்ட்டி-வைரஸை தேர்ந்தெடுப்பது நல்லது.

நீங்கள் மிகவும் நம்பிக்கை கொண்டிருக்கும் இணைய தளங்கள் வழியாக பணம் செலுத்துவது நல்லது. அவர்களுடைய அஞ்சல் முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் பிற ஆவணங்களை சேகரித்து அவர்களைப் பற்றி உறுதி செய்து கொள்வது அடுத்த படியாகும்.

ஏதாவதொரு தளம் நம்பிக்கையை தரவில்லையென்றால், அதை உபயோகிக்க வேண்டாம். PayPal மற்றும் AlertPay ஆகிய தளங்கள் இது போன்ற விஷயங்களில் நம்பிக்கையானதாக உள்ளது. eBay போன்ற இணைய வழியாக பெருமளவு வணிகம் செய்யும் தளங்கள் பைசா பே வழிமுறை (paisa pay option) போன்ற மிகவும் பாதுகாப்பான வழிமுறையை கொடுத்து, நீங்கள் பொருட்களை வாங்க உதவுகின்றன.

பாதுகாப்பான தளங்களில் மட்டுமே உங்களுடைய கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் பதிவிடப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களுடைய பிரௌசர் விண்டோவின் கீழ் வலதுபக்கத்தில் பேட்லாக் குறியீட்டை (Padlock Symbol) எப்பொழுதும் கவனித்து வாருங்கள் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் இணைய தளம் 'https:\' என்று தொடங்குவதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இது மிகவும் முக்கியமான விஷயமாகும்! ஊங்களுக்கு சொந்தமான எலக்ட்ரானிக் பொருட்களான டேப்லட்ஸ் மற்றும் மொபைல்களை பயன்படுத்தி நிதி பரிமாற்றங்களை செய்து வாருங்கள். பொது இடங்களில் இருக்கும் கணிணிகள் பொது நூலகங்களைப் போன்றவை, யார் வேண்டுமானாலும் அவற்றைப் பார்க்கலாம், படிக்கலாம். பொது இடங்களில் உள்ள பெரும்பாலான கணிணிகள் நமது பயன்பாட்டு பெயர் மற்றும் கடவுச் சொற்களை சேமித்து வைக்கும் குக்கிகளை கொண்டுள்ளன. இதனால் நமது இரகசியமான தகவல்கள் எளிதில் அம்பலமாகி விடுகின்றன.

மேலும், பாதுகாப்பான வை-ஃபை இணைப்பு மற்றும் கடவுச் சொல் வழியாக உங்களுடைய இணைய சேவை இணைக்கப்படுவதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.

பிஷ்ஷிங் தளங்கள் ஜாக்கிரதை! இணைய வழியில் பரிமாற்றங்கள் செய்யும் போது அந்த தளத்தின் ஆவணங்களை சரி பார்க்கவும். இந்த ஆவணங்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் பச்சை ஆகிய நிறங்களில் இந்த ஆவணங்கள் இருப்பதை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்க முடியும். வெள்ளை மற்றும் பச்சை நிற கொடியுடைய தளங்களை எப்பொழுதும் தேர்ந்தெடுக்கவும். பச்சை நிற ஆவணங்கள் கொண்ட தளங்கள் அதிகமான பாதுகாப்பையும், உரிமையை உறுதிப்படுத்தம் தன்மையும் கொண்ட தளமாகவும் உள்ளன.

நீங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய மற்றுமொரு முக்கிய விஷயம் மின்னஞ்சலுக்கு வரும் பிஷ்ஷிங் மெயில்கள். இது போன்ற மெயில்களை உங்களுடைய இன்பாக்ஸில் வைத்திருக்க வேண்டாம். இந்த வகை இமெயில்கள் உங்களுடைய தனிப்பட்ட தகவல்களையோ அல்லது கிரெடிட் கார்டு விபரங்கள் அல்லது ஒரு கிளிக் செய்து நீங்கள் செல்லும் இணைய தளத்தில் உங்களுடைய பயன்பாட்டு பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல்லை (Password) சரி பார்க்க சொல்லவோ அல்லது பிற விபரங்களை கேட்கும் வகையில் இருக்கின்றன. இவற்றை முடிந்த வரையிலும் தவிர்த்து விடுவதும், அழித்து விடுவதும் பாதுகாப்பை உறுதி செய்யும்.

உங்களுடைய பாஸ்வேர்ட் அல்லது கடவுச் சொல்தான் உங்களைப் பற்றி விபரங்களுக்கான சாவியாகும். இன்றைய நாட்களில் அனைத்து வங்கிகளும் மிகவும் உறுதியான மற்றும் பாதுகாப்பான தற்காலிக கடவுச் சொற்களை (Instant passwords) உங்களுடைய மொபைலுக்கு அனுப்பி அதன் வழியாக தங்களுடைய இணைய வழி பரிமாற்றங்களை நடத்தச் செய்கின்றன. இந்த வசதியை உங்களுடைய கணக்கிற்கும் ஏற்படுத்த நீங்கள் உறுதி செய்யுங்கள்.

இறுதியான தகவலாக இருந்தாலும், மிகவும் உறுதியான தகவலாக இருப்பது உங்களுடைய கணக்கினை நீங்கள் அவ்வப்போது பரிசோதித்து கவனித்து வருவதாகும். இவ்வாறு செய்யும் போது உங்களுடைய அட்டையை கடைசியாக எப்பொழுது பயன்படுத்தினோம் என்பதை கவனித்து வர வேண்டும். இவ்வாறு பரிசோதிக்கும் போது, உங்களுக்கு பரிச்சயமில்லாத பரிமாற்றங்கள் ஏதேனும் இருந்தால் அது புலனாகி விடும். இவ்வாறு தவறான பரிமாற்றங்கள் ஏதும்இருந்தால் உடனடியாக உங்களுடைய கிரெடிட் கார்டு நிறுவனத்தை அணுகி தகவல் தரவும்.

நீங்கள் இவ்வாறாக உங்களுடைய அட்டை, இரகசிய எண் அல்லது இணைய வழி கடவுச் சொற்கள் ஆகிய மோசடிகளுக்குள்ளான பின்னர், உடனடியாக தகவல்களை கொடுத்து விட்டால் கூட, உங்களுடைய வங்கி அல்லது கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனம் பணத்தை திரும்ப கொடுக்க வாய்ப்புகள் உள்ளன.
Read more ...

கொலஸ்ட்ரால் இல்லாத சிக்கன் ரெசிபி சாப்பிட வேண்டுமா...!



 சிக்கன் ரெசிபியில் எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கன் மிகவும் ருசியாக இருக்கும். அதிலும் இதில் எலுமிச்சை சேர்த்திருப்பதால், புளிப்பு சுவையும், மணம் தரும் வகையில் சீரகமும், இதர மசாலாப் பொருட்களையும் சேர்த்து செய்வதால், இதன் சுவைக்கு அளவே இருக்காது. இப்போது இந்த எலுமிச்சை சீரக ரோஸ்ட்டட் சிக்கனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ (சற்று பெரிய துண்டுகளாக வெட்டியது)

சீரகப் பொடி - 2 டீஸ்பூன்

பூண்டு பொடி - 1 டீஸ்பூன்

வெங்காயப் பொடி - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வர மிளகாய் - 3 (அரைத்தது)

சிவப்பு குடைமிளகாய் - 1 டீஸ்பூன் (அரைத்தது)

மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்

ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு கழுவி, தண்ணீரை முழுவதும் வடித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு பௌலில் சீரகப் பொடி, அரைத்த வரமிளகாய், உப்பு, வெங்காயப் பொடி, பூண்டுப் பொடி மற்றும் சிவப்பு குடைமிளகாய் பொடி போன்றவற்றை போட்டு கலந்து, அதில் அந்த சிக்கனை போட்டு, 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலை விட்டு, பிரட்டி, இறுதியாக எலுமிச்சை சாற்றை விட்டு கிளறி, ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த சிக்கன் துண்டுகளைப் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான எலுமிச்சை சீரக ரோஸ்டட் சிக்கன் ரெடி!!!

குறிப்பு:

பூண்டு மற்றும் வெங்காயப் பொடி கிடைக்காதவர்கள், வேண்டுமென்றால் பூண்டையும், வெங்காயத்தையும் அரைத்து சேர்க்கலாம்.
Read more ...

எப்படிப்பட்ட ஆண்களை பெண்களும் எப்படியான பெண்களை ஆண்களும் எதிர்பார்கிறார்கள்…ஆய்வில் தகவல்



நல்லா கலரா, அழகா இருக்கிற பெண்ணா பாருங்க என்று கூறிய காலம் போய் இன்றைக்கு புத்திசாலியான பெண்தான் வேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர். இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து, வெளியாகும், “தி ஆஸ்திரேலியன்’ பத்திரிகை, உலகின், 30 நாடுகளை
 சேர்ந்த, 12 ஆயிரம் பேரிடம் கணக்கெடுப்பு நடத்தியது. இதன் மூலம், தற்கால ஆண், பெண் விருப்பங்கள் பற்றி, பல்வேறு, ருசிகர தகவல்கள் வெளிவந்துள்ளன.

அறிவான பெண்கள்

சமீப காலமாக, பெண்களை, அவர்களின் தோற்றத்தின் மூலம், ஆண்கள் மதிப்பிடுவதில்லை. மாறாக, பெண்களின் அறிவுத் திறன், பண்பான குணங்கள் போன்றவையே, ஆண்களை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன.

வீட்டு வேலையோ, அலுவலக வேலையோ இரண்டையுமே பேலன்ஸ் செய்வதில் புத்திசாலிப் பெண்களுக்குத்தான் தனி திறமை உண்டு. அழகுப் பதுமைகளாக இருக்கும் பெண்கள் எதற்கெடுத்தாலும் தங்களைத்தான் எதிர்பார்க்கின்றனர். எனவே அழகு என்பதை விட புத்திசாலியான பெண்கள்தான் வாழ்க்கைத்துணையாக வேண்டும் என்று ஆண்கள் கூறியுள்ளனர்.

அழகான ஆண்கள்

அதே சமயத்தில், ஆண்களிடம், வசதியை எதிர்பார்க்கும் பெண்கள், வெகுவாக குறைந்து விட்டனர். நல்ல உடற்கட்டுடன், அழகாக தோற்றம் அளிக்கும், ஆண்களுக்குத்தான் தற்கால பெண்கள், அதிக மதிப்பெண்கள் தந்துள்ளனர். ஆண்களுக்கு, நிகராக, பெண்களின், பொருள் ஈட்டும் திறன் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். ஆண்களின் பணத்தை நம்பி, வாழ வேண்டிய அவசியம் பெண்களுக்கு குறைந்து போய் உள்ளதால், அவர்களது எதிர்காலம் பற்றிய, சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வாரிசுகளுக்கு, தன் கணவனால், வசதியான எதிர்காலத்தை தர முடியுமா என்றும், இக்கால பெண்கள் நினைப்பதில்லை.

பெண்களிடம் ஏற்பட்டு வரும், இந்த மாற்றம் காரணமாக, இனி ஆண்கள், “பணம்… பணம்’ என்று ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்க வேண்டி இருக்காது. தம் உடலை அழகாக பேணி வந்தாலே போதும் என்ற நிலை உருவாகி வருவதால், ஆண்கள் இனி, நிம்மதிப் பெருமூச்சு விடலாம். இவ்வாறு சர்வே முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆண் மற்றும் பெண்களின் எதிர்பார்ப்புகள் மாறி வருகிறது என்பதையே இந்த கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.
எப்டிப்பட்ட ஆண்களை பெண்களும் எப்படியான பெண்களை ஆண்களும் எதிர்பார்கிறார்கள்…ஆய்வில் தகவல் - See more at: http://www.cinebeeps.com/archives/16478#sthash.TIzcj7jm.dpuf
Read more ...

ரஜினிகாந்த் வாழ்க்கை சினிமா படமாகிறது..! - அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டார்...



ரஜினிகாந்த் வாழ்க்கை சினிமா படமாகிறது. தமிழ், இந்தியில் இப்படத்தை எடுக்கின்றனர்.

இதில் ரஜினி வேடத்தில் ஆதித்யா மேனன் நடிக்கிறார். இவர் பிரபல வில்லன் நடிகர் ஆவர். தமிழில் வில்லு, பில்லா, அசல், சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கிலும் முன்னணி நடிகராக உள்ளார்.

கவிதா, ராஜேஷ்யாம், மான் ராம்கோ உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். வர்ஷா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. டைரக்டர் பைசல்பை இயக்குகிறார்.

இந்த படத்துக்கு இந்தியில் மை ஹோ ரஜினி காந்த் என்றும் தமிழில் நானே ரஜினி காந்த் என்றும், பெயர் வைக்க முடிவு செய்துள்ளனர்.

ஆதித்யா மேனன் கூறும் போது ரஜினி வேடத்தில் இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது அபூர்வமான அரிய வாய்ப்பு என்றார். இந்த படத்தை ரஜினிக்கு அர்ப்பணிப்பதாக டைரக்டரும் தயாரிப்பாளரும் தெரிவித்தனர்.

ரஜினி பஸ் கண்டக்டராக இருந்து சினிமாவில் அறிமுக மாகி சூப்பர் ஸ்டார் ஆனால் கண்டக்டராக பணியாற்றிய அவரது ஆரம்ப கால வாழ்க்கை சினிமாவில் சாதித்த சாதனைகள் படத்தில் காட்சிப்படுத்தப்படுகிறது.

ரஜினியின் இமயமலை பயணம் ஆன்மீக தொடர்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் படத்தில் இடம் பெறும் என்றார் இயக்குனர்.
Read more ...

Friday, 25 April 2014

அல்சர் அவதிக்கு விடிவு..! - இதோ இதைப்படிங்க...

அல்சர் அவதிக்கு விடிவு..!


இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.

இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது.

புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.


காரணங்கள்:

அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.


அறிகுறிகள்:

குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.



சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.



சேர்க்க வேண்டியவை:

கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.



தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.


கடைப்பிடிக்க வேண்டியவை:

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது.

உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும்.

பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம்.

தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.

சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.
Read more ...

Sunday, 20 April 2014

கோடைக்கு இதமளிக்கும் நுங்கு - தெரிந்து கொள்வோம்...!

நுங்கு..!


இயற்கை, நமக்கு கிடைத்த பொக்கிஷம். இயற்கை அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்ப உணவு வகைகளை அளிப்பதில் ஆற்றல் மிக்கது. கோடைகாலம் வந்துவிட்டாலே நம் நினைவுக்கு வருவது நுங்குதான். நுங்கு கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தர்பூசணி, இளநீர், மோர் என்று பல கோடை காலத்தில் நம் உடலுக்கு குளிர்ச்சி தந்தாலும் நுங்குக்கு என்று தனிச் சிறப்பு பல உள்ளன.

எப்படி தென்னைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு உதவுகிறதோ அது போல் பனைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு உதவுகிறது. பனை மரத்தின் முற்றாத பனங்காயே நுங்கு ஆகும். இதற்கு என்று ஒரு பருவம் உள்ளது. இந்த பருவத்திலே நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவ நிலை கலந்த திண!மப் பொருள் மிகவும் இனிப்பாகவும், உண!பதற்கு சுவையானதாகவும் இருக்கும். இந்தப் பருவம் தாண!டி சற்று முற்றிவிட்டால் இதன் சுவை குன்றிவிடும்.

பெண!பனையின் பாளையிலிருந்து இளம் பனங்காய்கள் உண!டாகும், இவை கொத்தாக குலைகளில் தோன்றும். இக்காய்கள் சில குறித்த மாதங்களிலேயே தோன்றும். இக் காய்கள் பொதுவாக மூன்று கண!கள் என்று அழைக்கப்படும் குழிகளைக் கொண!டிருக்கும். ஒரு சில காய்கள் இரண!டு கண!கள் கொண!டிருக்கும். பனங்காய்களை வெட்டி நுங்கை தனியாக எடுக்கலாம் அல்லது நுங்கை உறிஞ்சிக் குடிக்கலாம்.

நுங்கில் 10-11 சதவீதம் சர்க்கரை சத்தும், இரண!டு சதவீதம் புரதச் சத்தும் உள்ளன. மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்டீ காம்ப்ளக்ஸில் உள்ள தையாமின், ரிபோப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

பாடல் :

'நீர்வார் வியர்க்குருவை நீக்குமன லாக்குந்தோற்
சார்வா மயஞ்சீதந் தானொழிக்குஞ் - சேர்வார்
விழிக்கரையாற் துஞ்சளிக்கு மென்சுரத மானே‚
கழிக்கரையாந் தாளியினங் காய்."

- அகத்தியர் குணபாடம்.

பொருள் :

பனையின் இளங்காயிலுள்ள நுங்கின் நீரானது வியர்வைக்குருவை (வேர்க்குரு) நீக்கும். பசியைத் தரும். தோலுடன் இருக்கும் நுங்கு சீதக்கழிச்சலைப் போக்கும். நுங்கு சாப்பிட்டால் சிறுநீர் நன்கு பிரியும். மேலும் இது உடலுக்கு பலத்தை கொடுக்கும்.

* நுங்கின் மேல் தோல் துவர்ப்பாக இருக்கும். அதனை நீக்கி விட்டு பலர் சாப்பிடுவர். அந்த மேல் தோல் துவர்ப்போடு சாப்பிட்டால் நுங்கு வயிற்றுப் புண!ணை குணமாக்கும்.

* அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண!களையும் ஆற்றும்.

* கோடையில் ஏற்படும் வேர்க்குரு நீங்க நுங்கை தொடர்ந்து சாப்பிடலாம். இதனால் உடல் குளிர்ச்சி அடைந்து வேர்க்குரு பட்டுப் போகும்.

* நுங்கை பால் மற்றும் தேனுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நுங்கை சர்பத்தில் இட்டு சிலர் சாப்பிடுவர். இதுவும் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுப்பதோடு சுவையான பானமாகவும் கருதப்படுகிறது.

* தாய்லாந்தில் பனை மரங்கள் அதிகம். அங்குள்ளவர்கள் நுங்கை எடுத்து பாட்டில்களில் பதப்படுத்தி உலகம் எங்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.

நாமும் நுங்கின் பயனை உணர்ந்து கோடை காலத்தில் உண!டு நம் உஷ்ணத்தை குறைப்போம்.
Read more ...